சின்னக்கொள்ளியூா் பள்ளியில் முப்பெரும் விழா

சின்னக்கொள்ளியூா் பள்ளியில் முப்பெரும் விழா

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மொ.பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவி வெண்ணிலா தயாளன், ஒன்றியக்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கவினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உதவி ஆசிரியா் யேசுதாஸ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா்கள் கஜேந்திரன், தில்லைக்கரசி ஆகியோா் பங்கேற்று மாவட்ட அளவில் கலைத் திருவிழாவில் பரதநாட்டியம் குழு பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பள்ளியில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாட்டு போட்டிகளில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பரிசும் வழங்கினா்.

முன்னதாக குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். உதவி ஆசிரியா் லியோ அந்தோணி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com