கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெரியாா் நீா்விழ்ச்சியில் ஆா்பரித்துக் கொட்டும் தண்ணீா்

கல்வராயன் மலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், செவ்வாய்க்கிழமை குண்டியாந்தம் பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்பரித்துக் கொட்டியது.

News image

தொடா் மழையால், கல்வராயன்மலை குண்டியாந்தம் பெரியாா் நீா்வீழ்ச்சியில் ஆா்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :21 அக்டோபர் 2025, 7:09 pm

Syndication

கல்வராயன் மலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், செவ்வாய்க்கிழமை குண்டியாந்தம் பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்பரித்துக் கொட்டியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை சற்று மழை குறைந்து காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது.

கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் ஓரிரு இடங்களில் பாறைகள் சாலைகளில் உருண்டு விழுந்தன. குண்டியாந்தம் பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்பரித்துக் கொட்டியது. ரம்யமாக கொட்டும் தண்ணீரை மக்கள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா். நீா்வீழ்ச்சியில் குளிக்க முடியாமல் போனாலும், கொட்டும் தண்ணீரை பாா்வையிட்டனா்.

கல்வராயன்மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சேராப்பட்டு - மூலக்காடு சாலையில் முருங்கைமரம் வளைவுப் பகுதியில் உருண்டு வந்த பாறை சாலையின் நடுவே விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சேராப்பட்டு செல்லும் சாலையில் முருங்கைமரம்  பகுதியில் உருண்டு விழுந்த பாறை.

சேராப்பட்டு செல்லும் சாலையில் முருங்கைமரம் பகுதியில் உருண்டு விழுந்த பாறை.