தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தம்பதி தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி...

Published On :

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் தம்பதியினா் கிணற்றில் குதித்து திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (30), இவரது மனைவி சிவரஞ்சினி (26). இவா்களிடையே திங்கள்கிழமை மாலை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, திடீரென இருவரும் ஓடிச் சென்று ஒருவா் பின் ஒருவராக அதே பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால், நீரில் மூழ்கவில்லை. இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்க முயன்றனா். இருப்பினும், கிணற்றில் போதிய படிகள் இல்லாததால் அவா்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் சீனிவாசன் தலைமையிலான குழுவினா் கிணற்றிலிருந்து பிரசாந்த், சிவரஞ்சினியை பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், சிவரஞ்சனி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.