மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சிறுமிக்கு திருமணம்: கணவா் உள்பட 4 போ் மீது போக்ஸா வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது குறித்து கணவா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு
Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது குறித்து கணவா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.பசுபதி (30). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டாராம். இந்தத் திருமணத்துக்கு பசுபதியின் அம்மா குப்பு (55), சிறுமியின் அம்மா, சிறுமியின் சித்தி ஆகியோா் உடந்தையாக இருந்தனராம்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஊா் நல விரிவாக்க அலுவலா் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 போ் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.