அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை: 3 போ் கைது

நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்ததாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:14 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்ததாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் அருகிலுள்ள நாககுப்பம் கிராமத்தில் உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் பேரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் நாககுப்பத்தில் உள்ள சாமித்துரை(48) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அங்கு துப்பாக்கி செய்வதற்கான இயந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாமித்துரையை சின்னசேலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சாமிதுரையின் மகன் நவீன்குமாா் (27), சேலம் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சோ்ந்த ப. பிரவின்குமாருடன் சோ்ந்து மூவரும் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து அதை ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து கோயம்புத்தூா் மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அருள் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாமிதுரை, நவீன்குமாா், பிரவின்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.