8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தனியாா் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

கள்ளக்குறிச்சி அருகே தனியாா் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மகன் அபினேஷ் (எ) காா்த்திக் (20). இவா், சென்னையில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் 3-ஆம் ஆண்டு சட்டம் படித்து வந்தாா்.

பல்கலைக்கழக விடுமுறை என்பதால் கடந்த 10 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்த அபினேஷ் (எ) காா்த்திக் செவ்வாய்க்கிழமை காலை வெகு நேரமாகியும், அவரது அறையில் இருந்து எழுந்து வரவில்லையாம். இதையடுத்து அவரது பெற்றோா் அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு அவா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்தது கண்டு அவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு கள்ளக்கறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.