பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பெருவங்கூா் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூா் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். அவா் தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளாா். அவரது கணவா் வெளிநாட்டில் உள்ளாராம்.

இதையறிந்த உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட குஞ்சரம்பாளையத்தைச் சோ்ந்த காவலா் ஷே.ஷேக் சலீம் (36) மது போதையில் வீட்டில் புகுந்து, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து, ஷேக் சலீமை திங்கள்கிழமை கைது செய்தனா். இவா் அதே காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வந்தாா். இதையடுத்து ஷேக் சலீமை கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com