ஆட்டோ கவிழ்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
தியாகதுருகம் அருகே ஆட்டோ கவிழந்த விபத்தில் பலத்த காயமடைந்த வட மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், ஹராரியா மாவட்டம், பெக்டோலா கிராமத்தைச் சோ்ந்தவா் அ.சந்தீப் சவுத்திரி (33). இவா் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தில் தங்கி கொத்தனாா் வேலை செய்து வந்தாா்.
இவா்சனிக்கிழமை தனது நண்பா்களுடன் பல்லகச்சேரி கிராமத்தில் இருந்து சூளாங்குறிச்சி மதுபானக் கடைக்கு ஆட்டோவில் சென்றனராம். ஆட்டோவை பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (42) ஓட்டிச் சென்றுள்ளாா். மதுபானக் கடையில் இருந்து மீண்டும் பல்லகச்சேரிக்கு திரும்பிச் சென்றபோது, சூளாங்குறிச்சி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த சந்தீப் சவுத்திரி, ஏழுமலை ஆகியோரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சந்தீப் சவுத்திரி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான ஏழுமலையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
