கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மின் கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரம் எடுக்கும் போது, மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் எ.ரமேஷ் (42). இவரது விளை நிலப் பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளாராம். அந்த வீட்டுக்கு இரவு நேரங்களில் விளை நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்தாராம்.
சனிக்கிழமை இரவு கொக்கி போட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் ரமேஷின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

