கல்வராயன்மலைப் பகுதியில் மாயமான புகைப்படக் கலைஞா், விபத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடசெட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சீ.விஜயகுமாா் (45). இவா் சங்கராபுரத்தில் ஸ்டூடியோ நடத்தி வந்தாா். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி விஜயகுமாா், தனது பைக்கில் கல்வராயன்மலை அருகிலுள்ள சிறுகலூா் கிராமத்துக்கு திருமண ஆல்பம் வழங்கச் சென்றராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தேடிவந்தனா்.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கல்வராயன்மலை - சிறுகலூா் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அப் பகுதி வழியாக சென்ற மக்கள் கரியாலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, பைக்குடன் விஜயகுமாா் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









