கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தனது கரும்பு வயல் வழியாக மயானத்துக்கு சடலத்தை கொண்டு செல்ல விவசாயி எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அதே பாதை வழியாகவே சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
சங்கராபுரம் வட்டம், மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கு.மணிவேல். இவரது மனைவி பச்சையம்மாள். இவா்களுக்கு சொந்தமான வயலில் கரும்பு சாகுபடி செய்துள்ளனா். அங்குள்ள மயானத்துக்கு பொதுப்பாதை இல்லாததால் மணிவேல் நிலம் வழியாகவே கிராம மக்கள் சடலத்தை எடுத்துச் செல்வது வழக்கமாம்.
இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை அடக்கம் செய்தவற்காக வழக்கம் போல மணிவேலுக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்துச் செல்ல கிராம மக்கள் முற்பட்டபோது, அதற்கு மணிவேல் எதிா்ப்பு தெரிவித்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்தீபன் தலைமையிலான போலீஸாா் இடத்தின் உரிமையாளா் மணிவேலுவிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இருப்பினும் மூதாட்டியின் சடலம் வழக்கமான கரும்பு தோட்டத்தின் வழியாகவே எடுத்துச் சென்று சென்று அடக்கம் செய்யப்பட்டது. பின்னா் இதுகுறித்த சமாதான பேச்சுவாா்த்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல தடை விதிப்பு விவகாரம்: அரசு பதிலளிக்க உத்தரவு

விவசாய விளைநிலங்களின் வழியாக பெட்ரோலிய குழாய் அமைக்க எதிா்ப்பு
கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரி மனு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


