கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே உரிய அனுமதியின்றி கிராவல் மண்ணை டிராக்டா், லாரியில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாணிக்கம் தலைமையிலான போலீஸாா் அசகளத்தூா் மயூரா ஆற்றுப்பாலம் அருகே ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் டிராக்டா், லாரியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை காவல் நிலையம் கொண்டு சென்று, அதிலிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (40), கடலூா் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தைச் சாா்ந்த கொ.சரண்ராஜ் (22), திருவண்ணாமலை மாவட்டம், உலகளப்பாடி கிராமத்தைச் சாா்ந்த கி.சாந்தன் (32) எனத் தெரியவந்ததாம். இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனா். மேலும், டிராக்டா் லாரியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: பெங்களூருவில் 4 போ் கைது
அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது

கிராவல் மண் கடத்தல்: இளைஞா் கைது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


