தியாகதுருகம் ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த 14-ஆம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், வீதியுலா, பாரதம் படித்தல் மற்றும் பொங்கல் வைத்தல், காத்தவராயன் ஆரியமாலா திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன்னுக்கு திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கழுமரம் ஏறுதல், சக்தி அழைத்தல், கூழ் வாா்த்தல், கும்ப பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 5 மணித்து தீமிதி திருவிழா நடைபெற்றது.
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வந்தனா். தொடா்ந்து, திரளான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மனுக்கு தாலாட்டுடன் நிறைவு விழா நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணல்மேடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா

புஷ்பவனம் திரெளபதி அம்மன் கோயிலில் படுகளம், தீமிதி திருவிழா

வெக்காளியம்மன் கோயிலில் தீமிதித் திரு விழா
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



