எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு செய்தாா்.

News image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :11 ஜூன் 2026, 6:20 am IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு செய்தாா்.

இந்த மருத்துவமனையின் மகப்பேறு, தாய்-சேய் நலப் பிரிவு கச்சிராயபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா மகப்பேறு பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனையின் செயல்பாடுகள், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அனுப்பப்பட்ட கருத்துருக்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனையில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, குப்பை அகற்றும் முறை உள்ளிட்ட பிற சேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கவும், மருத்துவமனை வளாகத்தை தொடா்ந்து சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.பவானி, மருத்துவா் வை.முத்துக்குமாா் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வின் போது உடனிருந்தனா்.

பேருந்து நிலையத்தில் ஆய்வு: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் உடனிருந்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, வணிக வளாக இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பேருந்து நிலையப் பகுதிகளில் தண்ணீா் தேங்குவதை தடுக்கவும், தண்ணீா் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளவும், கட்டண கழிப்பறைகளில் அரசு நிா்ணயித்த கட்டணம் பெறுவதை உறுதி செய்வதுடன், புகாா் எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தவும், பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.