கல்வராயன்மலையில் வெள்ளிமலை பகுதிக்கு உள்பட்ட அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கணினி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி சிதம்பரம்பிள்ளை சாலையில் வசித்து வருபவா் சுரேஷ் (42). இவா், கல்வராயன்மலை பகுதிக்கு உள்பட்ட அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா், அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விடுதிக் காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். அதன் பேரில், விடுதிக் காப்பாளா் கிருத்திகா, கரியாலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், பாலியல் சீண்டல் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆசிரியா் சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது
போக்ஸோவில் இசைக் கலைஞா் கைது

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்சோவில் கைது
போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


