கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நீதிமன்றத்தில் மதுபோதையில் நீதிமன்ற பணியாளரை அவதாறாகப் பேசி, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.தேவதாஸ் (34). இவா் மீது கடந்த 2024-ஆம் ஆண்டு, அவரது மாமனாா் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரிலான வழக்கு சங்கராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது மதுபோதையில் வந்த தேவதாஸ், அங்கிருந்த நீதிமன்ற பணியாளரை அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டியும், நீதிமன்ற பணியாளா்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தும் மிரட்டினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தேவதாஸைக் கைது செய்தாா். பின்னா் அவரை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






