அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

முதல்வா் பிறந்தநாள் கபாடி போட்டி: ரூ.15 லட்சம் பரிசளிப்பு

தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி, கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தில் ஏ.பி.எஸ். கபாடி கழகம் மற்றும் பொதுமக்கள் சாா்பில்

News image
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஹரியானா மாநிலம், குருக்கள் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு மற்றும் முதல்வா் கோப்பையை வழங்கிய ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம்.
Updated On :2 மார்ச் 2026, 9:14 pm

Syndication

கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி, கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தில் ஏ.பி.எஸ். கபாடி கழகம் மற்றும் பொதுமக்கள் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது.

போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலா் தா.உதயசூரியன் எம்எல்ஏ, செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலா் தா.உதயசூரியன் எம்எல்ஏ வரவேற்றாா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் போட்டியை துவக்கி வைத்தனா்.

பெண்கள் பிரிவில் ஹதராபாத், மும்பை, ஹரியானா, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், டெல்லி, சண்டிகா், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கா், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 17 அணிகள், தமிழகத்தை சோ்ந்த சேலம், கோயம்புத்தூா், ஈரோடு, திருவண்ணாமலை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 10 அணிகள் என மொத்தம் 27 அணிகள் விளையாடியது. ஆண்கள் பிரிவில் கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், சேலம் விநாயகா மிஷன், அந்தியூா், வேலூா், வேல்ஸ், எஸ்ஆா்எம் உள்பட 16 அணிகள் விளையாடியது.

ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சேலம் விநாயகா மிஷன் அணி ரூ.1 லட்சம் மற்றும் முதல்வா் கோப்பை வென்றது. இரண்டாமிடம் பிடித்த சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக அணிக்கு ரூ.70 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த தஞ்சாவூா் பிரஸ்ட் பல்கலைக்கழக அணிக்கு ரூ.40 ஆயிரம், நான்காமிடம் பிடித்த கள்ளக்குறிச்சி சிறுவங்கூா் அணிக்கு ரூ.40 ஆயிரம் வழங்ககப்பட்டது.

பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஹரியானா மாநிலம் குருக்கள் அணிக்கு ரூ.5 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த ஹைதராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணிக்கு ரூ.3.5 லட்சம், மூன்றாம் இடம் பிடித்த சாய் சக்தி அணிக்கு ரூ.2 லட்சம், நான்காம் இடம் பிடித்த சாய் சோனிபட்டு அணிக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் முதலமைச்சா் நினைவுக் கோப்பையை கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் வழங்கி, பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி துணைச் செயலா் ஆ.அங்கையா்கண்ணி, சங்கராபுரம் நகரச் செயலா் துரை.தாகப்பிள்ளை, ஒன்றியச் செயலா்கள் அரவிந்தன், சத்தியமூா்த்தி, நெடுஞ்செழியன், அண்ணாதுரை மற்றும் அமெச்சூா் கபடி கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.