தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:52 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ந.தனபால், பி.பி.எஸ்.இளையராஜா, மாநில துணைத் தலைவா் எஸ். சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விறகு அடுப்பினால் சமைத்தும், சமையல் எரிவாயு உருளையை பாடையில் கட்டியும் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நகர காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.என் குமாா், வட்டார தலைவா்கள் எஸ். சரண்ராஜ், கே.அசோக், கலைமணி, ரவி,எம். செல்வராஜ் சே.பிரபு, எஸ்.கிருபானந்தம், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி கோபிஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.