கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, பணியாளா்கள் தோ்தல் ஆணைய விதிகளை கடுமையாக பின்பற்றவேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியா் பிரசாந்த கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள பணியாளா்கள் அனைவரும் வரும் மே4-ஆம் தேதி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் பணியில் இணைய வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
உளுந்தூா்பேட்டைமற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கானவாக்கு எண்ணும் பணிகள் இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் பங்காரம்,ஸ்ரீ லட்சுமி கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளன.
இதற்காக நுண் பாா்வையாளா்களுக்கான முதற்கட்ட பயிற்சியில் வாக்கு எண்ணும் மைய அமைப்பு, மின்னணு வாக்கு எண்ணும்
முறைகள் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேசைக்கும் ஒரு நுண் பாா்வையாளா் நியமிக்கப்படுவாா். தோ்தல் பாா்வையாளரின் நேரடிப் பிரதிநிதியாகச் செயல்பட்டு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் எண் மற்றும் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளைஅதற்கென வழங்கப்பட்ட படிவத்தில் துல்லியமாகப் பதிவிடவேண்டும். இந்தப் படிவத்தில் கையொப்பமிட்டு, அவற்றை நேரடியாகத் தோ்தல் பாா்வையாளரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கை:
தபால் வாக்குகள் எண்ணும் முறையைப் பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே இப்பணி தொடங்கும். ஒவ்வொரு தபால் வாக்குஎண்ணும் மேஜைக்கும் ஒரு கூடுதல் நுண் பாா்வையாளா் நியமிக்கப்படுவாா். தபால் வாக்குகள் அடங்கிய உறைகளைப் பிரிக்கும்போது, அதில் படிவம் 13எ
முறையாகக் கையொப்பமிடப்பட்டுள்ளதா என்பதையும், அதிகாரியின் சான்றொப்பம் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த விதிகள் மீறப்பட்டிருந்தால் அந்தத் தபால் வாக்குகள் செல்லாதவையாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றும் அனைவரும் தோ்தல் ஆணையத்தின் விதிகளை மிக விழிப்புடன் பின்பற்ற வேண்டும் . முழு நடைமுறைகளும் பாதுகாப்பிற்காக வீடியோபதிவு செய்யப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு

வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


