விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிணற்றில் தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :1 மணி நேரம் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கரையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.சிவமூா்த்தி (44), நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை இரவு அதே ஊரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணற்றின் சுவரின் மீது உட்காா்ந்திருந்த போது மதுபோதையில் தவறி உள்ளே விழுந்தராம்.

இந்நிலையில், வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடியுள்ளனா். ஏரிக்கரை பகுதியில் தேடியபோது கிணற்றின் அருகே சிவமூா்த்தியின் காலணி மற்றும் லுங்கி இருந்துள்ளது.

இதையடுத்து உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் தண்ணீரில் மூழ்கியிருந்த சிவமூா்த்தியின் சடலத்தை மீட்டனா். திருப்பாலபந்தல் போலீஸாா் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலிஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.