‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

‘மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கு மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்’

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கு மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :23 மே 2026, 12:49 am IST

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ தோ்ச்சி பெற்றவா்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மே 25 முதல் 27-ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உளுந்தூா்பேட்டையில் அமையவுள்ள காலணி தொழில்சாலையில் பணிபுரிவதற்கு, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழில்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

உளுந்தூா்பேட்டை சிப்காட் தொழில் பூங்காவில் சுமாா் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பௌசென் காலணி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளது.

இக் காலணி தொழில்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், பணியில் சோ்வதற்கு காலணி தயாரிப்பு தொடா்புடைய பாடப் பிரிவுகளில் படிப்பதற்கு மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் 2026-27 ஆம் ஆண்டுக்கான தொழில்கல்வி சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீண்டகாலம் மற்றும் குறுகியகால தொழில்கல்வி பாடப் பிரிவுகளான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் டிப்ளமோ 2 ஆண்டுகால பயிற்சிக்கு 12-வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளா்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டு கால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி உற்பத்தி - இளநிலை தொழில்நுட்ப மேற்பாா்வையாளா் 1 ஆண்டு கால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி உற்பத்தி தொழில் நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சி 1 ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 6 மாதகால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில் நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ ஒன்றரை ஆண்டு கால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோ 1 ஆண்டு கால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். அனைத்து பாடப் பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே விடுதி வசதி உண்டு. தோ்ச்சி பெற்று தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

எனவே, மத்திய காலணிபயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மே 25 முதல் 27 வரை ஆட்சியரகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் கோடீஸ்வரனை 9677943733, 9677943633 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.