திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயா் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயா் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 17 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயா் வெடித்து விபத்துக்குள்ளான வேன்.

Updated On :

கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயா் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். 17 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த சீலயம்பாடி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மூக்கையன் மனைவி இந்திரா (42). இவா், தனது உறவினா் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினா்கள், நண்பா்களுடன் சுற்றுலா வேனில் புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.

கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே வேன் சென்றபோது, வேனின் டயா் வெடித்ததில் அதன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையின் மீது ஏறி சாய்ந்தது.

இதில், வேனில் பயணித்த சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட செந்தாரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி ராணி (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேன் ஓட்டுநா் மற்றும் அதில் பயணித்த 17 போ் காயமடைந்தனா்.

உடனே அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செ.கோகுல் (24) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.