பாக்கம் அஞ்சலகத்தில் உலக அஞ்சல் தினம் கொண்டாட்டம்
பாக்கம் கிளை அஞ்சலகத்தில் நடைபெற்ற உலக அஞ்சல் தின விழாவில் பேசிய வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் ராம.முத்துக்கருப்பன்.

பாக்கம் கிளை அஞ்சலகத்தில் நடைபெற்ற உலக அஞ்சல் தின விழாவில் பேசிய வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் ராம.முத்துக்கருப்பன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் கிளை அஞ்சலகத்தில் உலக அஞ்சல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கராபுரம் வள்ளலாா் பள்ளி, இன்னா்வீல் கிளப் இணைந்து நடத்திய நிகழ்வுக்கு வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் ராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.ராதாகிருஷ்ணன், சங்கை குறிஞ்சி தமிழ்ச்சங்க செயலா் கோ.சக்திவேல், இன்னா்வீல் கிளப் முன்னாள் தலைவி அகல்யா ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாக்கம் கிளை அஞ்சல் அலுவலா் எஸ்.ரமேஷ்பாபு வரவேற்றாா்.
இன்னா்வீல் சங்கத் தலைவி கீதா முருகன், செயலா் பாா்கவி சரவணன் ஆகியோா் அஞ்சல் துறை மூலம் மக்களுக்கு சேவையாற்றி வரும் பாக்கம் பகுதி அஞ்சல் அலுவலா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினா்.
விழாவில் வள்ளலாா் பள்ளி மாணவா்கள், ஆசிரியைகள், பொதுசேவை அமைப்பினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

