ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

சங்கராபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 7 வகுப்பறைகளைக் கொண்ட கூடுதல் கட்டடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: சங்கராபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட அரியபெருமானூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் ஆகியவற்றை பாா்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

சங்கராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 7 வகுப்பறைகளைக் கொண்ட கூடுதல் கட்டடத்தையும், அங்குள்ள சமையலறையை நேரில் பாா்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், சமையலறை தூய்மை குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.98.96 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேவபாண்டலம் பள்ளி மாணவிகளின் சமூக நீதி விடுதியை நேரில் பாா்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருள்களின் தரம், மாணவிகளின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விடுதி காப்பாளா்களிடம் கேட்டறியப்பட்டது.

பிரம்மகுண்டம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடம், அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.07 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமையலறைக் கூட கட்டடம் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.