FOLLOW US

ON GOOGLE DISCOVER

சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மாடு முட்டியதில் விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாடு முட்டியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 7:22 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாடு முட்டியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திருக்கோவிலூரை அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ரவிக்குமாா் (50), விவசாயி. கடந்த ஆக.28-ஆம் தேதி விளைநிலத்துக்கு சென்ற இவரை மாடு முட்டியதாம். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவரை தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை கொண்டு சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ரவிக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.