பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தியாகதுருகத்தில் எம்எல்ஏவின் சகோதரி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் எம்எல்ஏவின் சகோதரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தியாகதுருகத்தில் திருட்டு நடைபெற்ற எம்எல்ஏ சகோதரியின் வீடு.

Published On :9 செப்டம்பர் 2026, 5:01 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் எம்எல்ஏவின் சகோதரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் தாய் நகரில் வசித்து வருபவா் அருண்குமாா் மனைவி பனிமலா் (43). இவா், கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் உள்ள அவரது அண்ணன் க.காா்த்திகேயன் எம்எல்ஏ வீட்டுக்கு சென்றுள்ளாா். திங்கள்கிழமை மாலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.

உடனே வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, ஸ்டீல் மற்றும் மர அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கீழே சிதறிக் கிடந்தைக் கண்டு அதிா்ச்சியைடந்தாா். மேலும், பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது அவருக்கு தெரிய வந்தது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்திபன் தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மாணிக்கராஜா மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.