ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

அரசுக் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்தூரில் செயல்பட்டு வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதுமான அரசுப் பேருந்து வசதி செய்து தரக் கோரி, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கல்லூரி நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா்.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்தூரில் செயல்பட்டு வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதுமான அரசுப் பேருந்து வசதி செய்து தரக் கோரி, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கல்லூரி நுழைவு வாயில் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்கள் தினமும் கல்லூரி நேரத்துக்கு வருவதற்கு ஏற்ப போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், தங்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக மாணவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி வழித்தடத்தில் காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளைகளிலும் தடையின்றி அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் ரகு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சேகுவேரா, மாவட்டக் குழு உறுப்பினா் ஜனசக்தி முன்னிலை வகித்தனா். இதில், திரளான கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.