பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற செயல்கள் தொடராமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வு நெருங்கி வரும் சூழலில், பாதிக்கப்பட்ட புதுவை மாணவியின் உடல்நலனில் கவனம் செலுத்தி, கல்வியைத் தொடரத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். குடும்பத்துக்கு பொருளாதார உதவி அளிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர் செல்லும் பேருந்துகளில் வாகன ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதியோடு அந்நியர்கள் சிலர் பயணிக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.