தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

செல்லிடப்பேசி கடையில் திருட்டு: இளைஞர்கள் 2 பேர் கைது

புதுவை அருகே செல்லிடப்பேசி கடையில் திருடிய 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Published On :

புதுவை அருகே செல்லிடப்பேசி கடையில் திருடிய 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புதுவை லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (26). இவர், அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலையில் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். இவர் புதன்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நள்ளிரவு வந்த மர்ம நபர்கள், கடையின் ஷட்டரை உடைத்து கடையிருந்த 50-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் உதிரிப் பாகங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

சிவக்குமார் வியாழக்கிழமை காலை கடையை திறக்கச் சென்றபோது கடையில் திருட்டுப் போனது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். மேலும், தனிப்படை அமைத்தும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அரியாங்குப்பம் போலீஸார், கடலூர் மெயின் ரோடில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது,  சந்தேகத்துக்குகிடமான வகையில் அங்கு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், சென்னை அயோத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), கார்த்திக் (24) என்பதும், அரியாங்குப்பம் செல்லிடப்பேசி கடையில் திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த அரியாங்குப்பம் போலீஸார், அவர்களை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசிகளையும், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.