முத்திரையிடும் திட்டம்: எடையளவு துறை அறிவிப்பு
புதுச்சேரியில் எடையளவு துறை அதிகாரிகள் வியாபார மையங்களில் முத்திரையிடும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் எடையளவு துறை அதிகாரிகள் வியாபார மையங்களில் முத்திரையிடும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சட்டமுறை எடையளவுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி செ.ஆபேல் ரொசாரியோ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவையில் பல பகுதிகளில் உள்ள அங்காடிகளில் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றை கட்டுப்பாட்டு அதிகாரி மேற்பார்வையில் உதவி கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடைகளில் பயன்பாட்டில் இருக்கும் எடையளவு இயந்திரங்கள் தராசு மற்றும் எடைக்கற்கள் சரியாக உள்ளதா என்றும் உரிய காலத்தில் எடைகள் மற்றும் அளவைகள் மீது அரசு முத்திரை புதுப்பிக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு நடத்தப்படுகிறது.
எடையளவுத் துறை அலுவலகம் தட்டாஞ்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு எடைக்கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை சரிபார்த்து சான்றிதழ் தரப்படுகிறது.
வணிகர்கள் அனைவரும் தங்களுடைய பயன்பாட்டில் இருக்கும் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்களை உரிய தொகை செலுத்தி அரசு முத்திரையை பதித்து அதற்குரிய சான்றைப் பெற்று தங்கள் கடைகளில் பார்வையான இடத்தில் வைக்க வேண்டும்.
மேலும் புதிதாக எந்த ஒரு எடையளவு மற்றும் இயந்திரம் ஆகியவற்றை வாங்கும் போதும், அதில் அரசு முத்திரை பதிக்கப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
மின்னணு தராசு இயந்திரம் வாங்கும் போது, அந்த இயந்திரத்தின் தன்மைகளைக் குறிப்பிடும் அடையாளத்தகடு மற்றும் அரசு முத்திரை பதித்ததற்கான சான்றிதழை வணிகர்கள் கண்டிப்பாக பெற வேண்டும். அவ்வாறு இல்லாத தராசுகள் எடையளவுத் துறை ஆய்வாளர்களால் பறிமுதல் செய்யப்படும்.
வணிகர்கள் நலன் கருதி அவர்கள் வியாபாரம் செய்து வரும் வியாபார மையங்களுக்கே சென்று சட்டமுறை எடை அளவுத் துறை ஆய்வாளர்களால் புதுவைப் பகுதிகளில் உள்ள முக்கிய வியாபார மையங்களில் கீழ்கண்ட நாள்களில் சிறப்பு முகாம் அமைத்து எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்களை முத்திரையிட உள்ளனர்.
எனவே வணிகர்கள் இவ்வாய்ப்பை பன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

