‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கருணை அடிப்படையில் பணி: அரசுக்கு கோரிக்கை

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசுக்கு காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் கே.ஐயப்பன், பொதுச் செயலர் எம்.ஷேக் அலாவுதீன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் நகராட்சி, திருநள்ளார், நிரவி, நெடுங்காடு, திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து கடந்த 2008-ஆம் ஆண்டும், அதற்கு பிறகும் பணியின்போது இறந்த 24 ஊழியர்களின் மனைவி, வாரிசுகளுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப குரூப் சி அல்லது கீழ்நிலை நிரந்தரப் பணி கேட்டு சம்பந்தப்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளிலிருந்து உள்ளாட்சித் துறைக்குக் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது, காரைக்கால் பகுதி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஏராளமான நிரந்தர, தினக்கூலி பதவிகள் காலியாக உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதைப் பயன்படுத்தி இறந்தவர் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.