புதுச்சேரி கிராமப் பகுதி சுவர்களை மிளிரச் செய்யும் வகையில், 52 நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் கலைநயமிக்க ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரியில் "நரேட்டிவ் மூவ்மன்ட்' எனும் இயக்கம் சார்பில் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, முதல்முறையாக கிராமப்புற சாலையோரச் சுவர்களில் ஓவியம் வரையும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் 52 நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் ஏம்பலம் கிராமத்தில் உள்ள கோயில் சுவர், அரசு கட்டட சுவர் மற்றும் பொது இடங்களில் கலைநயமிக்க ஓவியங்களை வரைந்தனர்.
ஓவியம் மற்றும் பல்வேறு கலைகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், இதுபோன்ற சுவர் ஓவியங்கள் வரையப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பபித்தரன் மித்ரா தெரிவித்தார்.
இது குறித்து ஓவியங்களை வரைந்த ஓவியர்களில் ஒருவரான லட்சுமி கூறும்போது, அருங்காட்சியங்களில்தான் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்பதை மாற்றி சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஓவியங்களை வரைந்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.