இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாணவர்களின் அடிப்படை உரிமைகளை காக்க திமுக தொடர்ந்து போராடும்: இரா.சிவா எம்எல்ஏ

மாணவர்கள் அடிப்படை உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து போராடும் என புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:25 am

தினமணி

மாணவர்கள் அடிப்படை உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து போராடும் என புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
 புதுச்சேரியில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுôரிகளில் திமுக மாணவர் பேரவைகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை இரவு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
 மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் வரவேற்றுப் பேசினார். துணை அமைப்பாளர்கள் ரெமிஎட்வின், கண்ணன், ஸ்ரீஹரி, சிவராமன், மதியழகன், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் நர்மதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திமுக மாணவர் பேரவைகளை தொடக்கி வைத்து, "தெற்கிலிருந்து ஒரு சூரியன்' என்ற புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கிப் பேசினார்.
 மாணவர் அணி இணைச் செயலாளர்கள் கோவி. செழியன், எம்.எல்.ஏ., பூவை. சி.ஜெரால்டு ஆகியோர் மாணவர் பேரவை நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
 தலைமை வகித்து திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:- மாணவர்களின் அடிப்படை உரிமைகளை காக்க திமுக தொடர்ந்து போராடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை திரும்பி பார்த்தால் அதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்கும்.
 தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சுயமரியாதைக்காகவும், மொழிக்காகவும் போராடியபோது வெகுண்டெழுந்தவர்கள் மாணவர்கள். மாணவர்களின் அடிப்படை உரிமைகள் காக்கவும், அரசின் சலுகைகள் கிடைக்கவும் திமுக தொடர்ந்து போராடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.