திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: பேரவையை முற்றுகையிட்ட மாணவிகள்

கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையை ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:33 am IST

கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையை ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் கூட்டுறவுத் துறை சார்பில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 200}க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென ஓராண்டு கல்விக் கட்டணம் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.51 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தக் கல்வியாண்டு முடிய இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதன் மூலம் ஒவ்வொரு மாணவியும் ரூ. 16 ஆயிரம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்தாண்டு பயிற்சியை நிறைவு செய்ய உள்ள மாணவிகளும் கட்டாயம் உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என அரசு உத்தரவும் பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்வியாண்டு முடியும் நேரத்தில் திடீரென கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது என மாணவிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 50}க்கும் மேற்பட்டோர் துறை அமைச்சரை சந்திக்க சட்டப்பேரவை முன் குவிந்தனர். இதையடுத்து அங்கு வந்த சட்டப்பேரவை காவலர்கள் 5 மாணவிகளை மட்டும் அழைத்துச் சென்று அமைச்சர் கந்தசாமியை சந்திக்க ஏற்பாடு செய்தனர். 
இதையடுத்து மாணவிகள் அமைச்சரிடம் கல்விக் கட்டணத்தை குறைக்க கோரிக்கை வைத்தனர். பின்னர் அங்கிருந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.