காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி, காரைக்காலில் தி.மு.க. சார்பில் பொதுவேலைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதுபோல இதே கோரிக்கைக்காக ஏற்கெனவே மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட 20}க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி வருகிற ஏப்.11}ஆம் தேதி அறிவித்திருந்த முழு அடைப்புப் போராட்டத்தை தி.மு.க. பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஏப்.5}ஆம் தேதிக்கு மாற்றியுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நிறுவனங்கள், கடைகள் முழுவதும் அடைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









