புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் நுழைவுத் தேர்வு கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள புஸ்தக் மந்தீர் புத்தக விற்பனையகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 முடித்த பிறகு மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர நீட், ஐஐடி, ஜிப்மர், நுழைவுத்தேர்வுகள் எழுத வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் இத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டது.
தொடக்க விழாவுக்கு வாசகர் வட்ட செயலர் பேராசிரியர் சம்பத்குமார் தலைமை வகித்தார். கண்காட்சியை கொரவள்ளிமேடு தியாகி சுப்பிரமணிய படையாச்சி அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் தமிழ்வாணன், விவேகானந்தா பயிற்சி மைய நிறுவனர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர்.
கண்காட்சியில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட், ஜிப்மர், எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு பயிற்சி புத்தகம், வினா}விடை புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், துணைத் தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் ஜெகதீசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








