வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

ரயில் மோதி தொழிலாளி சாவு 

புதுச்சேரி அருகே ரயில் மோதி தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:35 am IST

புதுச்சேரி அருகே ரயில் மோதி தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 புதுச்சேரி சங்கோதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பார்த்திபன் (52). கூலித் தொழிலாளி. திங்கள்கிழமை காலை மூங்கிலீஸ்வரி கோயில் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தை தாண்டி காலைக்கடன் கழிக்கச் சென்றார்.
 அப்போது அந்த வழியாக திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வந்துகொண்டிருந்த ரயில் அவர் மீது மோதியது.
 இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.