சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஆளுநர் கிரண் பேடி மீது காங்கிரஸ், திமுக உரிமை மீறல் புகார்

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது, பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்திடம் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை உரிமை மீறல் புகார் கொடுத்தனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:21 am IST

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது, பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்திடம் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை உரிமை மீறல் புகார் கொடுத்தனர்.
 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், தனவேலு, விஜயவேணி, தி.மு.க கீதா ஆனந்தன் ஆகியோர் கையொப்பமிட்டு பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் கொடுத்த புகார் மனு விவரம்: ஆளுநர் கிரண் பேடி சட்டப்பேரவையின் சுதந்திரத்தை குலைக்கும் வகையில் பேசி வருகிறார்.
 பாஜக நியமன உறுப்பினர்கள் நியமனத்தை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால
 உத்தரவை பற்றி கருத்து தெரிவிக்கையில், 3 பேரையும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்காவிட்டால் சட்ட சிக்கலையும், பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
 3 பேரையும் பேரவையில் அனுமதிக்கும் பட்சத்தில்தான், நிதி மசோதா தாக்கல் செய்ய அனுமதித்துள்ளேன் என்றும் நிபந்தனை விதித்திருப்பது பேரவையின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், தொடர்ந்து சட்டத்தை இயற்றுபவர்களே, சட்டத்தை மீறுபவர்கள் என்று பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளார்.
 இது அனைத்து உறுப்பினர்களின் உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. எனவே, தங்களின் புகாரை ஏற்று ஆளுநர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் சபை அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.