புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விங்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி தொலை தொடர்பு (பிஎஸ்என்எல்) மாவட்ட பொது மேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு தெரிவித்தார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பிஎஸ்என்எல் நிறுவனம் "விங்ஸ்' செயலி (WINGS APP) எனப்படும் முதல் இணையதள டெலிபோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விங்ஸ் செயலி மூலம் எந்த ஒரு மொபைல் எண்ணையும், எந்த நெட்வொர்க்காக இருந்தாலும், லேண்ட்லைனாக இருந்தாலும், கேட்ஜெட்டில் இருந்து (Tablet, Mobile, Laptap மற்றும் Apple phone) பிஎஸ்என்எல், தனியார், பொது வைஃபை மூலமாக பேசலாம்.
இதற்கு சிம்கார்டு தேவையில்லை. இலவச ஆடியோ, விடியோ கால் செய்ய முடியும். ரூ.1099 செலுத்தி www.bsnl.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைன் பதிவு செய்தால் பத்து இலக்கு எண் மற்றும் யுசர் ஐடி வழங்கப்படும்.
இந்தச் சேவை பதிவு செய்யும் வசதி கடந்த மாதம் 25}ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி புதுச்சேரி பிஎஸ்என்எல் தனது அங்கீகாரம் பெற்ற கிளைகளுடன் இணைந்து பைபர் கேபிள் வழியாக உலக தரத்தில் குரல் சேவையுடன் கூடிய அதிவேக பிராட்பேண்ட் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டம் கடந்த 20}ஆம் தேதி தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம் தொலைபேசி நிலையத்துக்கு உள்பட்ட சில இடங்களில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. தொடர்ந்து இச்சேவை புதுச்சேரி முழுவதும் வழங்கப்படும்.
ரூ.99 மாத வாடகையில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவில்லா அழைப்புகள் மற்றும் தினம் 1.5 ஜிபி, 20 எம்ஃபிபிஎஸ் வேகத்திலும், ரூ.199 மாத வாடகையில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவில்லா அழைப்புகள் மற்றும் தினம் 5 ஜிபி, 20 எம்ஃபிபிஎஸ் வேகத்திலும், ரூ.299 மாத வாடகையில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவில்லா அழைப்புகள் மற்றும் தினம் 10 ஜிபி, 20எம்ஃபிபிஎஸ் வேகத்திலும், ரூ.491 மாத வாடகையில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவில்லா அழைப்புகள் மற்றும் தினம் 20 ஜிபி, 20 எம்ஃபிபிஎஸ் வேகத்திலும் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோல, ரூ.349 பிளானில் தமிழகத்தில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் 24 மணி நேரமும் இலவச அழைப்புகள் உண்டு. வீட்டு இணைப்புகள் மூலம் பயன் பெறலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







