சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்த ஜிப்மரின் சேவை எண் அறிவிப்பு

கேரள வெள்ளத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஜிப்மர் சார்பில், சேவை மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:51 am IST

கேரள வெள்ளத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஜிப்மர் சார்பில், சேவை மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க ஜிப்மர் மருத்துவமனை சார்பில், ஆலோசனை மையம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.  
இந்தச் சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும். அதன்படி,  78670 86311 என்ற எண்ணில் மையத்தை திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம் என ஜிப்பர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை வழங்கும் வகையில்,   ஜிப்மர் பேரிடர் மேலாண்மை மருத்துவக் குழுவினர் பேராசிரியர் ஜெகதீஸ் மேனன், மருத்துவர் பிளஸ்ஸி ஜான், செவிலியர் அதிகாரி ஹெவோலி பிரபா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர்.
இந்தக் குழுவில் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அங்கு மருத்துவச் சேவையாற்ற உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.