பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மதுக் கடையை முற்றுகையிட முயற்சி: 40 பேர் கைது

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சாராயக் கடைகளை அகற்ற வலியுறுத்தி மதுக் கடையை முற்றுகையிட முயன்ற சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த 40 பேரை போலீஸார் கைது

Updated On :25 டிசம்பர் 2018, 9:29 am IST

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சாராயக் கடைகளை அகற்ற வலியுறுத்தி மதுக் கடையை முற்றுகையிட முயன்ற சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த 40 பேரை போலீஸார் கைது செய்தனர். 
புதுவை மாநிலம், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில், கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள சாராயக் கடை, மதுக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில், சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சியும் மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
ஆனால், அறிவித்தபடி, 
மாநிலச் செயலாளர் எஸ். லெனின் துரை தலைமையில் கட்சியினர் கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே திரண்டனர். தொடர்ந்து, சாராயக் கடைகளை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்டபடி அங்குள்ள மதுக் கடையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகச் சென்றனர். 
இவர்களை லாஸ்பேட்டை போலீஸார், கருவடிக்குப்பம் மயானம் அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 40 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.