மரத்தூள் மூட்டைகளுடன் மணல் கடத்தல்
புதுச்சேரி அருகே மரத்தூள் மூட்டைகளுடன் மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


புதுச்சேரி அருகே மரத்தூள் மூட்டைகளுடன் மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
புதுச்சேரியை அடுத்த பாகூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் பரிக்கல்பட்டு சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
லாரியில் மரத்தூள் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். மூட்டைகளை நீக்கிவிட்டு பார்த்த போது ஆற்று மணல் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநரான தவளக்குப்பம் தடா நகரைச் சேர்ந்த அஜித்குமாரை (20) பிடித்து பாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...