புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புவியின் மேற்புறம் மற்றும் உள்புறத்தின் நிலைமாறும் புவியியல் செயல்திட்டங்கள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்கலை.யின் புவியியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கை பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து புவியியியல் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாறை குழம்புகள், எரிமலைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், பாறையின் உருமாற்றமும், கனிமதாதுக்களின் உருவாக்கமும் அவற்றின் செயல்பாடுகள், படிவபாலங்கள் உருவாக்கு சூழ்நிலையியல், புவியின் முற்காலத்திய தட்பவெப்ப பருவநிலை மற்றும் தற்காலத்திய புவிவெப்ப மாற்றங்கள், நிலத்தடி நீர் மற்றும் நிலநீர் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவங்களும், கடல் வளிமண்டலத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
நிலத்தடி நீரின் முக்கியத்துவம், நிலத்தடிநீரின் மூலம், நிலத்தடிநீர் மேலாண்மை மற்றும் நிலத்தடிநீர் மாசுபடுவது மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
முன்னதாக பேராசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். துறைத்தலைவர் செந்தில்நாதன் நன்றி தெரிவித்தார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் ஆய்வுத்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.