புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுக வலியுறுத்தல்
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.


புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
புதுவை தெற்கு மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் தொகுதி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில அவைத் தலைவர் சீத்தா.வேதநாயகம் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
தீர்மானங்கள்: மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் மண்டல திமுக மாநாட்டில் திரளான தொண்டர்களுடன் பங்கேற்க வேண்டும்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாலைகளை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் புதுவை விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்க வேண்டும். வேளாண் பொருள்களை மானிய விளையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள இலவச சைக்கிள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன், மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...