இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தனியார் தொழிற்சாலையில் ஆளுநர் கிரண் பேடி ஆய்வு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது வழக்கமான ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி அருகே திருபுவனையில் உள்ள இரண்டு தனியார் தொழிற்சாலைகளில் நிலத்தடிநீர் தொடர்பாக ஆய்வு செய்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:46 am IST

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது வழக்கமான ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி அருகே திருபுவனையில் உள்ள இரண்டு தனியார் தொழிற்சாலைகளில் நிலத்தடிநீர் தொடர்பாக ஆய்வு செய்தார்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், தொழிற்சாலைகளின் நிலத்தடி நீர் ஆதாரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 
இந்த நிலையில், புதுச்சேரி அருகே உள்ள திருபுவனை கிராமத்தில் இரண்டு தனியார் தொழிற்சாலைகளில் நீர் ஆதாரம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, தொழிற்சாலை பகுதியில் உள்ள நிலத்தடிநீர் குறித்து ஆலை நிர்வாகிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். 
மாவட்ட ஆட்சியர் சவுத்ரிஅபிஜித் விஜய், கண்காணிப்புப் பொறியாளர் சத்யமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுக்குப் பிறகு தனது கட்செவி அஞ்சல் மூலம் ஆளுநர் பதிவிட்ட செய்தி:
தொழில்நிறுவனங்கள் மழைநீர் சேகரிப்புகளை அதிகரிக்க வேண்டும். காலியிடங்களை இதற்கு அதிகளவில் பயன்படுத்தவேண்டும். இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) இதற்கு முயற்சி எடுத்து அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். தொழிற்சாலைகள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் இணைத்து கொண்டு மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து உள்ளூர் மக்களுக்கு உதவ வேண்டும். 
செப். 8-ஆம் தேதி இலக்கு நாளாக நிர்ணயித்து இத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

ஆய்வுக்குச் செல்லும் கிரண் பேடி கடந்த சில மாதங்களாக காரில் செல்லாமல், செலவீனங்களை குறைப்பதற்காக அதிகாரிகளுடன் அரசுப் பேருந்தில் சென்று வருகிறார்.
திருபுவனை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாநில சாலைப் போக்குவரத்துக்கழக பேருந்தில் சென்ற அவர், ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பும்போது பேருந்து பழுதாகி நின்றது. 
இதையடுத்து தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து மூலம் ஆளுநர் கிரண் பேடி மற்றும் அதிகாரிகள் ஆளுநர் மாளிகை திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.