விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மாநில திருக்குறள் பேச்சுப் போட்டி

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:47 am IST

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.
ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. நிறைவு விழாவில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ப. பாலமுருகன் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி துணை முதல்வர் மார்டின் தீ குருஸ் பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியானது 10 மையங்களில் நடத்தப்படுகிறது. புதுச்சேரி தவிர மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய நகரங்கங்களில் இப்போட்டி நடக்கிறது. 
சென்னை மையத்தில் ஏற்கனவே ஜூலை 21-ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியானது இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இடைநிலைப் பிரிவில் 6, 7, 8 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பிரிவில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இடைநிலை பிரிவில் முதல் மூன்று இடங்களை பிரிதீக்கா, தயாநிதி, நவீன்குமார் ஆகியோர் பெற்றனர்.
மேல்நிலைப் பிரிவில் முதல் மூன்று இடங்களை தொல்காப்பியன், அருள்மொழி, தரணீஷ்வர் ஆகியோரும், கல்லூரி பிரிவில் முதல் மூன்று இடங்களை தினேஷ், கீர்த்தனா, கலைவாணி ஆகியோரும் பெற்றனர்.
முதல் சுற்று, அரை இறுதிச் சுற்று, இறுதிச் சுற்று என மூன்று நிலைகளாக பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. பத்து மையங்களிலும் நிகழ்ச்சி நாளன்று காலையில் முதல் சுற்றும், மாலையில் அரை இறுதிச் சுற்றும் நடைபெறும். இறுதிச் சுற்றானது, சென்னையில் அக்.6, 7 தேதிகளில் நடைபெறும்.
ஓவியப் போட்டியைப் பொறுத்தவரை, ஒரே சுற்றாக தேதிகளில் மண்டல அளவில் மட்டுமே நடத்தப்படும். இறுதிச் சுற்றில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ.10,000, 
ரூ. 7,500, ரூ. 5,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.