திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இலவச அரிசி வழங்க காலதாமதம்: பேரவையில் காரசார விவாதம்

இலவச அரிசி வழங்க காலதாமதம் ஏற்பட்டு வரும் விவகாரம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:26 am

DIN

இலவச அரிசி வழங்க காலதாமதம் ஏற்பட்டு வரும் விவகாரம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
புதுவை சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பேசும்போது:
புதுவை அரசு பொறுப்பேற்ற பின்னர் குப்பை வரி, தண்ணீர் வரி என வெறும் வரியை மட்டுமே உயர்த்தி வருகிறது. புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அரசு மருத்துவமனையின் நிலை மிக மோசமாக உள்ளது. 
இலவச அரிசியை கூட சரியாக வழங்க முடியவில்லை. குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சிவப்பு நிற குடும்ப அட்டைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 
அப்போது குறுக்கிட்டு பேசிய சிவா எம்எல்ஏ (திமுக), இலவச அரிசி கொண்டு வரப்பட்டு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் இறக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. நியாய விலைக் கடை ஊழியர்கள் போராட்டத்தால் மக்களுக்கு அவற்றை விநியோகிக்க முடியவில்லை. 
லாரிகளில் அவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மழை வந்தால் அவை வீணாகிவிடும். எனவே, நியாய விலைக் கடை ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அப்போது, முதல்வர் நாராயணசாமி குறுக்கிட்டு, நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் இவ்வளவு கமிஷன் என கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. பின்னர், நாம் அவர்களை அரசுடன் இணைத்துக் கொண்டுவிட்டோம். இதன் காரணமாக அவர்களுக்கு 17 மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது 3 மாத ஊதியம் வழங்குவதாக அரசு தெரிவித்தது. அவர்கள் அதனை ஏற்க மறுத்து 5 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றனர். இன்னும் 10 நாள்களுக்குள் 5 மாத ஊதியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதனை ஏற்று ஊழியர்கள் அரிசி வழங்கும் பணியை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
இதையடுத்து மீண்டும் சிவா (திமுக) பேசும்போது, எப்போது இந்த ஊதியம் வழங்கப்படும் என்ற தேதியை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்பிக்கையோடு அரிசியை வழங்குவார்கள் என்றார்.
தொடர்ந்து, பாஸ்கர் எம்எல்ஏ (அதிமுக) பேசும்போது, உங்களால் அரிசி வழங்க முடியவில்லை என்றால், எங்கள் தொகுதி அரிசியை எங்களிடம் கொடுங்கள். எம்எல்ஏக்கள் நாங்களே அரிசியை வழங்குகிறோம் என்றார். அவரைத் தொடர்ந்து, அதிமுக பேரவைக்குழுத் தலைவர் அன்பழகன் பேசும்போது, நாங்கள் மற்றவர்களைப் போல் அல்ல, கடையை திறந்தாலும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை நாங்களே வழங்குவோம் என்றார். இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, 10 நாள்களில் உறுதியாக 5 மாத ஊதியம் வழங்கப்படும். மீதமுள்ளதொகை படிப்படியாக வழங்கப்படும் என்றார். 
பின்னர், கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, நாம் பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருக்கிறோம். அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றே (திங்கள்கிழமை) இலவச அரிசியை வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.