திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து புதுவையில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் முதல் நாளில் உற்சாகமாக வந்தனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:19 am

DIN

கோடை விடுமுறை முடிந்து புதுவையில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் முதல் நாளில் உற்சாகமாக வந்தனர்.
தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், புதுவையில் கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் அரசு- நிதியுதவி மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 
மாணவ- மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்றனர். சில குழந்தைகள் விடுமுறை கொண்டாட்டத்திற்குப் பின் பள்ளி செல்ல அடம்பிடித்ததையும், அக்குழந்தைகளை பெற்றோர், பள்ளியில் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றதையும் காணமுடிந்தது. முதல்நாளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கின. ஆனால் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் முழுநேரம் செயல்பட்டன. 
அரசுப் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு முதல்நாளிலே நோட்டு- புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. முதன்முதலாக வந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் கொடி தோரணங்கள் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், புதிய மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றன. 
இதேபோல, காரைக்காலிலும் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் நிதியுதவி, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர்.
அதேநேரத்தில் மாஹே பிராந்தியத்தில் கோடை விடுமுறைக்குபின் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூன் 
12-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என மாஹே முதன்மை கல்வி அலுவலர் உத்தமராசா அறிவித்துள்ளார். 
இதேபோல, புதுவையில் சில தனியார் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 6) மற்றும் 13-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.