பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தேதி இறுதியாகவில்லை

மத்திய அரசின் அனுமதி பெற்ற கோப்பு இதுவரை வராததால், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தேதி இறுதி செய்யப்படவில்லை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 2:45 am

DIN

மத்திய அரசின் அனுமதி பெற்ற கோப்பு இதுவரை வராததால், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தேதி இறுதி செய்யப்படவில்லை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பாக பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தேதி இறுதி செய்யப்படாததால், கூட்டத்தில் இருந்து என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பேரவைக்குழுத் தலைவர் அன்பழகன், மத்திய உள்துறையின் அனுமதி கிடைக்காததால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு முதல்வரும், ஆளுநரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரை பொறுத்தவரை துணைநிலை ஆளுநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 
4 நாள்களுக்குப் பிறகு நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் செய்து, மாநில அரசின் நிதிநிலை அறிக்கை தொகை, எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை, வரவு, செலவுக்கு எவ்வளவு தொகை என்பதை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
புதுவை மாநிலம் தமிழகம் போல அல்ல. இங்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். 4 மாதங்களுக்கு முன்பே இதற்கான வரைவு திட்டத்தை மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டோம்.
அதன் பின்னர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கோப்புகளை கடந்த 4 வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினோம்.
உள்துறை அதற்கு ஒப்புதல் கொடுத்து நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியது. தற்போது நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயலிடம், நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தருவது தொடர்பாக தொலைபேசியில் பேசினேன். அதையடுத்து, கடந்த 4 நாள்களுக்கு முன்புதான் நிதி அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து அந்தக் கோப்பு, 3 நாள்களுக்கு முன்புதான் உள்துறைக்கு வந்துள்ளது. 
இதற்கிடையே ஆளுநர், துணைநிலை ஆளுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் குடியரசுத் தலைவர் தலைமையில் திங்கள்கிழமை நடப்பதால், அதில் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். எனவே, மத்திய உள்துறையிடம் இருந்து நிதிநிலை அறிக்கைக்கான முழுஒப்புதல் பெற்ற கோப்பு, புதுவை அரசுக்கு வந்த பின்னர்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தேதியை குறிப்பிட முடியும்.
இதுதொடர்பாக, உள்துறைச் செயலாளரை சந்தித்து விரைவாக ஒப்புதல் அளிக்க கேட்க உள்ளேன். ஆகவே, இதற்கு மாநில அரசையோ, மாநில அதிகாரிகளையோ குறை சொல்வதில் அர்த்தம் இல்லை என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.