மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மின் கட்டண பாக்கிதாரர்களின் பெயரை வானொலியில் அறிவிக்க உத்தரவு

புதுவையில் மின்கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பெயரை, வானொலி பண்பலையில் அறிவிக்க ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

Updated On :26 ஜூன் 2018, 9:26 am IST

புதுவையில் மின்கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பெயரை, வானொலி பண்பலையில் அறிவிக்க ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
 புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முன்னிலையில் புதுவை அரசின் மின்துறைச் செயலர் பிரசாந்த் பாண்டா, கண்காணிப்புப் பொறியாளர் ரவி மற்றும் மின் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 புதுவையில் 25,000 பேர் மின்கட்டண பாக்கி வைத்துள்ளனர். மொத்தம் ரூ.120 கோடி மின்கட்டண பாக்கி உள்ளது. மின்கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை பத்திரிகைகள், பண்பலைகளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். வணிக, தொழில் மற்றும் வீட்டு இணைப்புகளில் பாக்கி வைத்திருக்கும் பழைய வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்கள் பெயர்கள் தனித்தனியாக வெளியிடப்படும். பாக்கிவைத்திருப்பவர்கள் தங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்க்க ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ள்க்ஷண்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் மூலமாக கட்டணத்தை உடனடியாக செலுத்தலாம். மின்கட்டண பாக்கியை வசூலிக்க சிறப்புக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். மின்கட்டண பாக்கியை வசூலிக்கும் வரை அதிகாரிகள் ஓய்வு எடுக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் பாக்கிதாரர்களுக்கு சலுகை காட்டக்கூடாது.
 அதே போல, கல்வித் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சிகள், காவல் துறை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆகியவை தாங்கள் ஏற்கெனவே செலவு செய்யும் மின் அளவில் 10 சதவீதத்தை தாங்களாகவே சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை மூலம் புதுவை மின்துறையை சீரமைக்க ரூ.100 கோடி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஓராண்டுக்கு புதுவையில் ரூ.1,300 கோடி மின்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
 இருப்பினும், இதில் ரூ.100 கோடி ஆண்டுதோறும் வசூலிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, பழைய பாக்கியை வசூலிப்பதுடன், புதிதாக மின்கட்டண பாக்கி இல்லாமல் மின்துறை பார்த்துக்கொண்டால் மின்துறை புதுப்பொலிவை எட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.